சோயாவெஜ் கோலா உருண்டை.
தேவையான பொருட்கள் :
100 கிராம் மீல் மேக்கர்,கால் கப் பொரிகடலை,
சிறியதுண்டு இஞ்சி,3பச்சை மிளகாய், சிறிதளவு பட்டை, கிராம்பு.லவங்கம்,
ஒரு டீஸ்பூன்சோம்பு, 1 பெரிய வெங்காயம்,கருவேப்பிலை, கொத்தமல்லி,
தேவைக்கேற்ப உப்பு,பொறிப்பதற்கு கடலை எண்ணெய்,5 பல்பூண்டு,
ஒரு டீஸ்பூன்கான்பிளவர் மாவு.
செய்முறை :
மீல் மேக்கரை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடம் ஊற
வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் மீல்மேக்கரை போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை,லவங்கம், கிராம்பு, சோம்பு
சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். விழுதை மீல்மேகரில் சேர்த்துக் கொள்ள
வேண்டும். ஒரு டீஸ்பூன் கான்பிளார் மாவு சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் இக்கலவையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து வைத்துக் கொண்டு, சிறு சிறு
உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு உருண்டைகளை போட்டு
மிதமான தீயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுவையான சோயா வெஜ் கோலா ரெடி. டொமேட்டோ சாஸ் கெட்சப் போன்றவற்றுடன்
சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
0
Leave a Reply