மென்மையான சருமத்திற்கு சந்தனம்மற்றும்தயிர்கலந்தஃபேஸ்பேக்
தயிரை நாம் முகத்தில் தடவுவதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், மிக சிறந்த பொலிவையும் தயிர் நமக்கு தருகிறது.தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்துக்கொள்கிறது.தயிர் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி என்றும் பளப்பளப்பான மற்றும் மென்மையான சருமத்தைஅளிக்கிறது.
சந்தனம்(sandalwooduses) ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன், தேன் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளுக்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை முகத்தில் வைத்து.பின்பு சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும. இந்த முறையை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.
சந்தனப்(sandalwooduses) பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.
சந்தனப் பொடியை (sandalwood uses) முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம்.அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.சந்தன எண்ணெயை முல்தானி மெட்டி பவுடரில் சேர்த்து கலந்து, முகத்திற்கு பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.சந்தனப் பொடியில்(sandalwooduses) தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.
0
Leave a Reply