வால் நட்சத்திரம் ஏலியன்களால் அனுப்பப்பட்டதா?
நாசாவின் அட்லஸ் தொலை நோக்கி சமீபத்தில் சூரிய மண்டலத்தில் ஒரு சிறிய வால் நட்சத்திரம் நுழைவதை, முதன்முதலில் கண்டு பிடித்தது. இதற்கு 3I/ATLAS என்று பெயரிடப்பட்டது.சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து வருகிற இது போன்ற விண்வெளிப் பொருட்களுக்கு, 'இன்டர்ஸ்டெல்லார் ஆப்ஜெக்ட்' என்று பெயர்.
இந்த வால் நட்சத்திரம் அட்லஸ் 20 கிலோ மீட்டர் நீளமானது. இதுவரை கண்டுபிடிக் கப்பட்ட இன்டர்ஸ்டெல்லார் பொருட்களிலேயே இது மிகப் பெரியது. இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள், இதில் சில மேகங்கள் இருப்பதை உறுதி செய்தனர். இதனுடைய மையம் பனிக் கட்டிகளால் ஆனது என்றும் தெரிவித்தனர். டிசம்பர் மாதத்தில் பூமியில் இருந்து 27 கோடி கிலோமீட்டர் துாரத்தில் இருக்கும் ஆனால், இதனால் எந்த பாதிப்பும் இல்லை. இது, சாதாரண வால் நட்சத்திரம்தான் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலையைச் சேர்ந்த அவிலோப் என்கிற ஒருவிஞ்ஞானி, 'இந்த அட்லஸ் முதலில் வால் நட்சத்திரமா அல்லது விண்கல்லா என்பதை கண்டறிய வேண்டும். இது. திட்டமிட்டு சூரிய மண்டலத்துக்கு ஏலியன்களால்அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.
'டார்க்பாரஸ்ட் ஹைபாதீசிஸ்' என்று ஒரு கருதுகோள் உண்டு. அதன்படி இந்தபிரபஞ்சத்தில் பிற நட்சத்திர மண்டலங்களில், எண்ணற்ற நாகரிகங்கள் மனிதர்களை போல வாழ்கின்றன. ஆனால், தங்களுடைய இருப்பு பிறருக்கு தெரியவந்தால் தங்களுக்கு ஆபத்து நிகழ்ந்துவிடும் என்பதால், அவை தங்களை மறைத்துக் கொண்டு வாழ்கின்றன.
இந்த அட்லஸ் வால் நட்சத்திரத்தை ஆராய்ந்து, அது ஏலியன்களால் அனுப்பப்பட்டது என்பது உறுதியானால், இந்த கருதுகோள் உண்மையாகும் என்று கூறியுள்ளார்.
0
Leave a Reply