சென்னை நீர்வழிகள் மேம்பாட்டுக்கு ரூ.7,500 கோடி நிதி ஒப்புதல்.
சென்னையின் முக்கிய நீர்வழிகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைத்து மேம்படுத்துவதற்காக ரூ.7,500 கோடி நிதியுதவிக்கு மத்திய அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி, தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டத்தின் முதல் கட்ட ஆதரவாக அமைகிறது.
'நகர்ப்புற சவால் நிதியம்' (Urban Challenge Fund) மூலம் மொத்தம் ரூ.30,000 கோடி வரை நிதி பெற தமிழ்நாடு தகுதி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) படிப்படியாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
நீண்டகாலமாக மாசுபாடு மற்றும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மூன்று நீர்வழிகளையும் முழுமையாகப் புதுப்பிக்கும் பணிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கண்கூடாக நிறைவேற்ற மாநில அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
0
Leave a Reply