25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ரசகுல்லா (Rasgulla).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரசகுல்லா (Rasgulla).

தேவையான பொருட்கள் - 1 லிட்டர் பால்,150 கிராம் சக்கரை,1 எலுமிச்சை பழம்.

 

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் பொங்கிவரும் போது குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்.

இதனுடன் எலுமிச்சை சாற்றை ஊற்றி கிளறிக் கொண்டே இருந்தால் பால் திரிந்து தண்ணீர் மற்றும் பனீர் தனியாக பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

இதனை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு 1 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி அலசி நன்கு வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

இதனை ஒரு தட்டில் போட்டு உதிர்த்துவிட்டு8 முதல்10 எடுத்து நிமிடங்கள் பிசைந்து கொண்டால் பனீர் மிருதுவாக இருக்கும். இந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் அவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பின் மிதமான தீயில் வைத்து கொள்ளவும் .அதனுடன் பனீர் உருண்டைகளை சேர்த்து கொள்ளவும்.

இதனை10 நிமிடங்கள் மூடி மிதமான தீயில் வைத்து வேக விடவும். இப்போது பனீர் நன்கு வெந்து பனீர் உருண்டைகள் இருமடங்காக பெரிதாக இருக்கும். இப்போது அடுப்பை அணைத்து விட்டால் ரசகுல்லா சுவைக்க தயார். இதனை ஆற வைத்து பின் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்த ரசகுல்லாவாகவும் பரிமாறலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News