25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு.

விருதுநகர் மாவட்டத்திலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள ராஜபாளையம் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம்  செய்ய ரூ.197.79 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது.

ராஜபாளை யம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோயில் பகுதியிலிருந்து 6வது மைல் பகுதியில் இரண்டு நீர்த்தேக்கங்கள் மூலம் 28 ஆயிரம் இணைப்புகளுக்கு நபருக்கு 60 லிட்டர் வரை ஏற்கனவே குடிநீர் வினியோகம் செய் யப்பட்டது.

தற்போது புதிதாக 10. ஆயிரம் இணைப்புகள் என 38,800 இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் 6வது மைல் தேக்க குடி நீரும், தாமிரபரணி குடிநீர் கலந்து பழைய இணைப்புகள் வழியே விநியோகிக்கப்படுகிறது.

குடிநீர் வடிகால் அதிகாரிகள்: குடிநீர் விநியோகத்திற்கு நகராட்சி 18 மண்டலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் சோதனை முழுமை  அடைந்த நிலையில் 7 மண்டலங்கள் டிச. ல் நகராட்சியிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது.வரி உயர்வுக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரி வித்ததால் கவுன்சில் கூட்டத்தில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.

முழுவதும் ஒப்படைக்கப்படும் சூழலில் புதியவரி நிர்ணயம் செயல்பாட் டிற்கு கொண்டு வர வேண் டும் என்பதால் பழைய குழாய்கள் வழியே வினி யோகம் செய்யப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு உயர்த்தப்பட்ட வரியை ' வசூலிக்க முடியாமல் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், புதிய வரிவசூல், தண்ணீர் திருட்டு போன்றவை கண் காணிக்க முடியாததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News