25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


செப்டிக் டேங்க்  கிளினர் லாரிகள், வேன்கள், நிறத்துமிடமாக மாறிய இராஜபாளையம் காமராஜ் நகர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செப்டிக் டேங்க் கிளினர் லாரிகள், வேன்கள், நிறத்துமிடமாக மாறிய இராஜபாளையம் காமராஜ் நகர்

இராஜபாளையத்தில் காமராஜ் நகர், இரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளது. இந்த ஏரியாவில் நிறைய உணவு விடுதிகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், அமைந்துள்ளன. ஹாஸ்பிடல் ரோடு என்ற ஏரியாவில் செப்டிக் டேங்க் கிளினர் லாரிகள் வேன்கள், இங்கு வரிசையாக நிறுத்துகின்றனர். வீடுகள் லாட்ஜ்கள், பள்ளிகள், உணவு விடுதிகள் இருக்கும் இடத்தில் “ பார்க் செய்வது தவறு  ”என எடுத்துச்சொல்லியும் கேட்பதாக இல்லை.சுகாதாரம் இங்கு பெரிய கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.

 “உங்க ரோடா ” “இது பப்ளிக் ரோடு யாருவேண்டுமானாலும் நிறுத்தலாம். ”என்று தைரியமாகக் கூறுகின்றனர். முனிசிபலில் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்க வில்லை, பள்ளியிலிருந்து வெளிவரும் குழந்தைகள் இதைத் தாண்டி, எதிர் வரும் வண்டியைத் தாண்டிச் செல்கின்றனர். நடைபாதையை ஆக்கிரமித்து நிற்கும் இந்த வண்டிகளை, யார் சொன்னால்  வேறு இடத்தில் நிறுத்துவார்கள் என்று தெரியாமல் காமராஜர் நகர் வாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News