25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


புரதம்,நார்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்ல நீண்ட நேரத் தூக்கத்தைத் தரும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புரதம்,நார்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்ல நீண்ட நேரத் தூக்கத்தைத் தரும்.

நாம் உண்ணும் உணவுக்கும் நம் தூக்கத்திற்கும் உள்ள தொடர் பைப் பற்றி புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஐ.ஐ.எஸ்., என்ற சர்வதேச அறிவியல் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.மொத்தம் 4,825 பேரின் உணவு முறையும், தூக்க முறை யும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நம்முடைய உணவில் மாவுச்சத்து, பல வகை யான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து ஆகியவை உள்ளன.

மெக்னீசியம், பொட்டாசியம். சோடியம் உள்ளிட்ட நுண் சத்துக்களும் உள்ளன. ஒவ்வொரு சத்தும் தூக்கத்தை எப்படி பாதிக்கின்றன என்று கண்டறிவது தான் இந்த ஆய்வின் நோக்கம்.ஆய்வின் முடிவில் புரதம்,நார்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்ல நீண்ட நேரத் தூக்கத்தைத் தரும் என்றும், அதிகமான சோடியம் உள்ள உணவுகள் துாக்கத்தைப் பாதிக்கிறது என்றும் தெரியவந் துள்ளது.கொழுப்பு நிறைந்த உணவு கள் சாப்பிடும் போது அடிக்கடி இரவில் தூக்கத்தின் இடையே எழுகின்ற சூழல் வருகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News