25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பாம்பன் பால திறப்பு விழா  , பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாம்பன் பால திறப்பு விழா  , பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் .

பிரதமர் மோடி இலங்கை அனுராதபு ரத்தில் இருந்து ஹெலி காப்டரில் புறப்பட்டு மன்னார் வளைகுடா டு கடல் வழியாக மண்டபம் வந்த போது தனுஷ்கோடி, இலங்கை தலைமன்னார் இடையே 35 கி.மீ.,ல் ராமபிரான் அமைத்த ராம் சேதுபாலத்தை பார்வையிட்டு தரிசித்தபடி வந்தார்.  ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலத்தை ,பிரதமர் மோடி மதியம் 12:55 மணிக்கு ரிமோட் மூலம்  ஏப்ரல் 6, 2025  அன்று புதிய ரயில் பாலத்தின் தூக்கு பாலத்தை திறந்து வைத்தார். 

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, இது நாட்டின் முதல் செங்குத்து லிப்ட், ரயில் கடல் பாலம் என்றார், இது அப்துல்கலாம் மண். அறிவியலும், ஆன்மிகமும் ஒன்றிணைந்தது என்பதை, அவரது வாழ்க்கை நமக்கு கற் பித்துள்ளது. அதுபோல, ராமேஸ்வரம் வரையிலான புதிய பாம்பன் பாலம் பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை, 21ம் நுாற்றாண்டின் பொறியியல் அதிசயத்தின் வாயிலாகஇணைத்திருக்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன் இப்பாலத்தை கட்டி யவர் குஜராத்தைச் சேர்ந்த வர். இன்று திறந்து வைத் ததும், குஜராத்தில் பிறந்த நான். இவ்வாறு மோடி பேசினார். 

இந்தியாவையும் இலங்கையையும் பின்னர், இலங்கையையும் ஆதாம் பாலம் வழியாக இணைக்கும் யோசனை முதலில் 1876 இல் ஆராயப்பட்டது. அதிக செலவுகள் காரணமாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இறுதியில், 1906 ஆம் ஆண்டில் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடிக்கு ஒரு ரயில் பாதை, மற்றும் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு ஒரு நீராவி கப்பல் சேவை.இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பாலம், அந்தக் காலத்தின் ஒரு பொறியியல் அற்புதமாகும். மதுரை விமான நிலையத்தில் பிரதமருக்கு தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், மதுரை ஆட்சியர் எம்.எஸ். சங்கீதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News