25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பகலாமுகி அம்மன்  கோயில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பகலாமுகி அம்மன்  கோயில்.

பீதாம்பர பீடம் மத்தியபிரதேசம் தாதியா நகரில் உள்ளது பகலாமுகி கோயில். சக்தி பீடமான இதில் தான் அம்மன் இருக்கிறாள் என்கின்றனர். முன்பு இப்பகுதியில் புயல் ஒன்று உருவாக இருந்தது. இதை அறிந்த துறவிகள் அம்மனிடம் முறையிட்டனர். அதை ஏற்று ஆஸ்ரமத்திற்கு முன்புள்ள சரோவர் ஏரியில், அம்மன் எழுந்தருளி புயல் வராமல் தடுத்தாள். பின் ஒருநாள் மதன் என்ற அரக்கன் இப்பகுதி மக்களை துன்புறுத்தினான். உடனே அம்மன் அவனது நாக்கை பிடித்து இழுத்தாள். கதறிய அவன், "தாயே... மன்னியுங்கள். உங்களின் பாதத்திற்கு கீழே நிரந்தரமாக இருந்து காவல் புரிகிறேன்'' எனக் கெஞ்சினான்.

மனம் இரங்கிய அம்மனும் 'பகலாமுகி' என்னும் பெயரில் இங்கு குடிகொண்டாள். பகலாமுகி என்றால் தங்கம் அல்லது மஞ்சள் நிறம் கொண்டவள் என பொருள். பகலாமுகியின் அருளால் ஈர்க்கப்பட்ட பிரம்யலீன் பூஜ்யபாத் என்ற துறவி கோயிலைக் கட்டினார். அம்மன் எழுந்த ஏரியின் நடுவில் தற்போது யந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.பக்தர்களை வரவேற்கும் விதத்தில் முகப்பில் அலங்கார வளைவு உள்ளது. ராஜபுத்திர, மராட்டிய கட்டட பாணியில் அமைந்த இக்கோயிலில்அழகானசிற்பங்கள், சுவர் ஓவியங்கள் உள்ளன.

கருவறையில் வெள்ளை பளிங்கால் ஆன பகலாமுகி அம்மனுக்கு நான்கு கைகள் உள்ளன. வலது கையில் உள்ள தடி அசுரனை அடித்த நிலையிலும், இடது கை அசுரனின் நாக்கை இழுத்த நிலையிலும் உள்ளது. உடம்பு முழுவதும் நகைகள் ஜொலிக்கிறது. அம்மனுக்கு உகந்த மஞ்சள் நிறத்தில் பூக்கள், ஆடைகள், இனிப்பு பண்டங்களைசமர்ப்பிக்கின்றனர். இதனால் எதிரி பயம் விலகும் என்பதுபக்தர்களின்அசைக்கமுடியாதநம்பிக்கை. அனுமன், பைரவர், பூஜ்யநாத், துாமாவதிசன்னதிகள்உள்ளன.நுாலகம், தியான மண்டபம், தோட்டம் ஆஸ்ரமத்தில் உள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News