25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி9-வது சுற்றில் குகேஷ் வெற்றி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி9-வது சுற்றில் குகேஷ் வெற்றி

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடக்கும்ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ்,5முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென்(நார்வே) உள்பட 6 வீரர்கள், பங்கேற்றுள்ளனர். இதில்ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். 

இதன் 9வது சுற்று ஆட்டம் ஒன்றில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய தமிழகத்தை சேர்ந்த குகேஷ் 40வது நகர்த்தலில் சீனாவின் வெய் யியை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 23-வது நகர்த்தலில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஹிகாருநகமுராவிடம்(அமெரிக்கா) டிரா கண்டார். இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க நடந்த டைபி ரேக்கரில் நகமுரா 48-வது நகர்த்தலில் எரிகைசியை வீழ்த்தினார்.

9வது சுற்று முடிவில் கார்ல்சென் 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,குகேஷ் 14% புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நகமுரா 13 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.கடைசி சுற்றில் குகேஷ், பாபியானோ கருனாவையும், கார்ல்சென், அர்ஜூன் எரிகைசியையும் சந்திக்கிறார்கள். இதன் முடிவில்யாருக்கு சாம்பியன் பட்டம் என்பது தெரியவரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News