25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


'க்ஸ்வி லாஸ்' எனப்படும் கோணல் காடு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'க்ஸ்வி லாஸ்' எனப்படும் கோணல் காடு.

ஐரோப்பிய நாடான போலந்து, நோவே ஜர்னோவா கிராமத்தில்,'க்ஸ்வி லாஸ்' எனப்படும்,கோணல் காடு அமைந்துள்ளது. இங்கு,400 பைன் மரங்கள். தரைப்பகுதியில் வடக்கு நோக்கி வளைந்து, பின் நிமிர்ந்து வளர்ந்திருக்கும், காட்சி வியப்பில் ஆழ்த்துகிறது.இந்த மரங்கள்9அடி வரை வளைந்து பின் நெடிதாக நிற்கின்றன. வழக்கமான பைன் மரங்கள் அடர்ந்த காடும் உள்ளது.இந்த மரங்கள் பெரும் புயலால் வளைந்ததாக கூறப்பட்டது. புவி ஈர்ப்பு விசையால் வளைந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.ஆனால் விஞ்ஞானிகள் இதை மறுக்கின்றனர். ஏனெனில் புவி ஈர்ப்பு விசை கீழ்நோக்கியே இழுக்கும்.

இந்த பகுதி விவசாயிகள், படகு கட்டுவதற்காக,1930ல் மரங்களை செயற்கையாக வளைத்து இந்த பகுதியில் வளர்க்க முயன்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இதுபரவலாக ஏற்கப்பட்டுள்ளது.இரண்டாம் உலகப் போரில், ஐரோப்பிய நாடான ஜெர்மனி,1939ல் போலந்தைக் கைப்பற்றிய போது, விவசாயிகளின் செயல்பாடு தடைபட்டு, திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.இதுபோன்று மரங்களை வளைத்து வளர்ப்பது சாத்தியமா என்பதற்கு அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள,"ஜில்ராய் கார்டன்' முன் உதாரணமாக உள்ளது. அங்கு, இது போல் வளைந்து, வளர்ந்துள்ள மரங்கள் உள்ளன.போலந்தில் உள்ள கோணல் காடு, அதன் தனித்துவத்தால் உலகப் புகழ் பெற்றுள்ளது. அதைபோலந்து அரசு பாதுகாக்கப்பட்ட இயற்கை சின்னமாக பராமரித்து வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News