25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலகக் கோப்பை ஹாக்கி: மீண்டும் சாம்பியனான ஜெர்மனி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை ஹாக்கி: மீண்டும் சாம்பியனான ஜெர்மனி!

ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்ற 16-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி பெல்ஜியத்தின் வாவ்ரே நகரில் நடைபெற்றது.

இதில் ஸ்பெயின் அணியும், நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியும் மோதின.

முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் 0-0 என சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் ஜெர்மனி அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் மிச்செல் ஸ்ட்ரூதோப் ஒரு பீல்டு கோல் அடித்து ஜெர்மனிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

எஞ்சிய நேரத்தில் ஸ்பெயின் அணி கோல் அடிக்க கடுமையாக போராடியபோதும், ஜெர்மனியின் தடுப்பாட்டத்தைத் தாண்ட முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, நடப்பு உலக சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டது.

இதன் மூலம் ஜெர்மனி அணி உலகக் கோப்பை ஹாக்கி வரலாற்றில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News