திருமணத்தை எளிமையாக பதிவிட்டு ரூ.10,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி ..
கவுதம் அதானி இளைய மகனும் ,அதானி ஏர்போர்ட்ஸ் இயக்குநருமான ஜீத் அதானி, வைர வியாபாரி ஜெய்மின் ஷா மகள் திவாவுக்கும் ,அகமதாபாத்தில் கடந்த 7-ம் தேதி திருமணம் நடந்தது.
இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதள வெளியிட்ட பக்கத்தில் கவுதம் அதானி, 'ஜீத் - திவா திருமணம் பாரம்பரிய முறைப் படி, ஜெயின் மற்றும் குஜராத்தி சமூகங்களின் கலாசாரத்தின்படி திருமண சடங்குகள் ,ஆமதாபாதில் நடந்து முடிந்தது.
இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அனைவரையும் அழைக்க முடியவில்லை.'இதனால்,மன்னிப்பு கோருகிறேன். அனைவரின் உங்கள் அன்பும், ஆசீர்வாதமும் மணமக்களுக்கு வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், நன்கொடையாக வழங்கப்படும் இந்த பணம், சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விலையில் மலிவு உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க செலவிடப்படும்.
'இது தவிர, மலிவு விலையில் உயர்மட்ட கே 12 பள்ளிகள் மற்றும் வேலைவாய்ப்புடன் மேம்பட்ட உலகளாவிய திறன் அகாடமிகளின் வலையமைப்பை அணுகுவதில் கவனம் செலுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
.திருமணத்தை முன்னிட்டு, பல்வேறு சமூகநலப் பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் கட்டுவதற்காக ஆண்டுதோறும் திருமணமான 500 மாற்றுத் திறனாளி பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி ஆகியவை அடங்கும்.
0
Leave a Reply