ராஜபாளைய நகர மக்கள் எதிர்பார்ப்புகள்
சாஸ்தா கோயில் வனப்பகுதியில் ட்ரக்கிங் வாய்ப்புகளை எதிர்பார்த்து சுற்றலா பயணிகள் காத்திருக்கின்றனர்.
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய சாஸ்தா கோயில் வனப்பகுதியும் அறிவிப்பில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அறிவிக்காததால் இதற்கான பரிந்துரைக்கு காத்திருக்கின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏரா ளமான ட்ரக்கிங் மலையேற்ற பகுதிகள் இருந்து வந்த நிலையில் காட்டுத்தீ, வன விலங்குகள் எதிர் கொள்ளுதல், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அரசால் முறைப்படுத்தி அறிவிக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டத்தில் சாஸ்தா கோயில் வனப்பகுதி ஏற்கனவே தகுந்த பாதுகாப்புடன் கண்காணிப்பின் கீழ் இருந்து வருவதுடன் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளுக்கு முறையான பாதுகாப்புடன் வனப்பகுதியின் தொடக்கம் முதல் அருவி வரை வாகனத்தில் அழைத்துச் சென்று ஆற்றில் நீராடிய பின் மீண்டும் கொண்டு வந்து விடப்படுகிறது.
இதில் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உணவு பொருள்கள் கட்டுப்பாடு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் தேவதானத்தில் போதிய வாய்ப்புகள் இருந்தும் சாஸ்தா கோயில் வனப்பகுதியில் சூழல் சுற்றுலா திட்டத்தில் ட்ரக்கிங் அமைக்க வாய்ப்புகள் இருந்தும் விடுபட்டதை அரசுக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் முடங்கியார் சாலையில் உள்ள இரட்டைக் குளம் கண்மாய் தெரியாத அளவிற்கு ஆகாயத்தாமரை செடிகள்.
ராஜபாளையம்-அய்யனார் கோவில் செல்லும் வழியில் உள்ள முடங்கியார் சாலையில் இரட்டைக்குளம், புளியங்குளம் கண்மாய் உள்ளது. இதில் கண்மாய் தெரியாத அளவிற்கு ஆகாயத்தா வதந்தி மரை அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் கண்மாய்களில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. ஆக்கிரமிப்பினால் இந்த கண்மாய்களின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் ஆற்றுப்பகுதி வழியாக இந்த கண் மாய்க்கு நீர் வந்து சேரும். தற்போது இந்த கண்மாய் பராமரிப்பு செய்யப்படாத தால் கண்மாய்க்கு நீர்வரத்து வழிகள் அடைபட்டு மழைநீர் செல்ல வழியின்றி காணப்படுகிறது. எனவே கண்மாயில் ஆக்கிரமித்து வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றவும், கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் சம் பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பு நிரந்தர தீர்வு காண கோரிக்கை.
ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி கூட் டுக் குடிநீர் திட்டம் மூலம் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்றி சப்ளைக்கான கடைசி கட்ட பணிகள் நடந்து வருகிறது.இதில் அழுத்தம் தாங்காமல் பல்வேறு இடங்களில் பகிர்மான குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.ஒரு சில இடங்களில் உடைப்பு சரி செய்யப்பட்டும் பல இடங்களில் குடிநீர் வாறுகால்களில் கலந்து வீணாவதுடன் அந்தந்த பகுதி ரோடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.தொடரும் இப்பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்
0
Leave a Reply