25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


2026-27ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதிற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்திடலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2026-27ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதிற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்திடலாம்.

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும் பலர் அறிய தொண்டாற்றி வருகின்றனர்.

 பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை முழுமையாக இணைத்துக்கொண்டு, சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க வகையில் ஆற்றிவரும் அறிய தொண்டினை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று  “டாக்டர் அம்பேத்கர் விருது" தமிழ்நாடு  அரசால்  வழங்கப்பட்டு  சிறப்பிக்கப்படுகிறது.

   அந்த வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது 2027 ஜனவரி மாதம் திருவள்ளுவர்  தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அரசின் www.tn.gov.in இணையதளத்தில் https://www.tn.gov.in/form_view.php? dep_id=MQ== என்ற இணைப்பை (Link) கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது ஆதிதிராவிடர் நல இயக்குநரக அலுவலகம், சேப்பாக்கம் சென்னை-600 005-ல் நேரில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப்  பெற்றுக்கொள்ளலாம்.

எனவே விருதினை பெற விரும்புவோர், தங்களைப் பற்றிய முழுவிவரங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தாங்கள் ஆற்றியுள்ள அரிய தொண்டுகள், சாதனைகள் மற்றும் அதற்கான உரிய ஆவணங்கள்/சான்றுகள் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன்   சமர்ப்பிக்க வேண்டும், இவ்விருதிற்கு விண்ணப்பித்திட 30.11.2026 அன்ற கடைசி நாளாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News