25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


இணைப்புச்சாலை தாமதத்தால் பாசனம் பாதிப்பு சாகுபடி பணிகளுக்கு சிக்கல் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இணைப்புச்சாலை தாமதத்தால் பாசனம் பாதிப்பு சாகுபடி பணிகளுக்கு சிக்கல் .

.2023ல் ரூ.8.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ராஜபாளையம் புது பஸ்ஸ்டாண்டிலிருந்து தென்காசி தேசிய நெடுஞ்சாலைக்கு நேரடிஇணைப்பு ரோடுபணிகளுக்காக,. பெரியாதிகுளம், கடம்பன்குளம்கண்மாய்பாசனபகுதிவழியே 30 மீட்டர்அகலத்தில் 2.10 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில்ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.பிப்.8ல் அடிக்கல் நாட்டப்பட்டு 10 மாதத்திற்குள் பணிகள் முடிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு 18 நீர்வழி பாலங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாசன வயல்களுக்கு நடுவே இணைப்பு சாலை செல்வதால் வாய்க்கால் தண்ணீர் மறுபக்கம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் 30 சதவீதத்துக்கும் அதிகமான நெல் வயல்கள் பாசனத்திற்கு வழியற்ற நிலை ஏற்பட்டடுள்ளது . பணிகள் தொடங்கி ஏற்கனவே ஒரு போகம் நீர் பாய்ச்ச முடியாமல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தொடர் தாமதத்தால் தற்போது முதல் போக சாகுபடியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்காலுக்கு தடையின்றி தண்ணீர் போக வழி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News