25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஒலிம்பிக் கனவை நனவாக்க 'டிரீம் ஒலிம்பிக்' திட்டம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒலிம்பிக் கனவை நனவாக்க 'டிரீம் ஒலிம்பிக்' திட்டம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்று, சாதனை படைத்த வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகைகளை வழங்கினார்.

மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நோக்கில் வீரர்களைத் தயார்படுத்தும் 'டிரீம் ஒலிம்பிக்' திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

தமிழக வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவதற்காக, வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெறும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை மேற்கொள்ளவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

போதைப் பழக்கத்தைத் தடுப்பதில் விளையாட்டுக்கு முக்கியப் பங்கு இருப்பதால், பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பள்ளிகளில் தினமும் 45 நிமிடங்கள் உடற்கல்வி வகுப்புகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், கல்லூரிகளிலும் 45 நிமிட உடற்கல்வி வகுப்புகளைக் கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், திருநங்கையர்களுக்காக மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News