மனித இனம் தனது வேலைகளை எளிதாக்க வசதியாக, மனிதனுக்கு உதவிய கழுதைகள்.
"காடுகளில் வேட்டையாடி உணவு தேடிய மனித இனம் தனது வேலைகளை எளிதாக்க வசதியாக மனிதனுக்கு உதவியாக சில விலங்குகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அதில், மனிதனையும், மனிதனின் உடைமைகளையும் ஊர் ஊராக தூக்கி சுமந்த கழுதைகளின் வரலாறு மிகப்பழமையானது. கழுதைகள் மதிப்பு மிக்க ஒரு விலங்காக இருந்தன .பண்டைய காலத்து நாகரிகங்களில் குதிரைகளை பழக்கும் முன்பு, நாட்டின்ஆட்சியாளர்கள் கழுதைகள் மீது அமர்ந்து நகர் வலம் வந்தனர் .கழுதைகள் பூட்டிய வண்டிகளில் பயணித்தனர். கழுதைகள்இந்த உலகத்தில் எப்படி வந்தன என்று அதன் மரபணுவை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிசெய்தனர்.
கி.மு.3000-ம் ஆண்டில் இருந்தே கழுதைகள் மனிதனுடன் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் அறியப்படுகின்றன. இன்றைய கழுதைகள் ஆப்பிரிக்க கழுதையின் இரண்டு கிளை இனங்களில் ஒன்றான ஈக்வஸ் ஆப்ரிகானஸ்' என்ற குடும்பத்தை சேர்ந்த நுபியன் கழுதை வகை ஆகும் என கண்ட றிந்தனர்.. பண்டைய எகிப்திய மன்னருடன் புதைக்கப்பட்ட கழுதைகளின் எலும்புக்கூடு புதை படிமத்தில் இருந்து இது தெரியவந்தது. கழுதையின் உழைப்பு இன்றும் தொடர்வதற்கு ஆதாரமாக சகாரா பாலைவனம் வழியாக பயணிக்கும் நாடோடி மக்கள் இன்றும் கழுதைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கி.மு. 200-ம் ஆண்டு முதலே ரோமானியராணுவத்தால் ,ராணுவத்திற்கு மிக முக்கியமான வேலை செய்யும் விலங்குகளாக ,கனரக பீரங்கி வண்டிகளைஇழுக்க கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. பேரரசர் அகஸ்டஸ் காலத்தில் ரோமானிய ராணுவத்தில் அரை மில்லியன் கழுதைகள் பணியாற்றின என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மலைப்பகுதி கிராமங்களில் சுமை இழுக்க கழுதைகள் இன்றும் கூட அனைத்து நாட்டிலும் புழக்கத்தில் உள்ளது.
0
Leave a Reply