25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


.திணை  அரிசி பணியாரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.திணை  அரிசி பணியாரம்.

தேவையான பொருட்கள் -

1 கப் திணை  அரிசி,

1/4 கப் உளுந்து,

தேவையானஅளவு உப்பு,

தேவையானஅளவுஎண்ணெய்.

தாளிப்பதற்கு -

1 பெரிய வெங்காயம்,

1/4 தேக்கரண்டி கடுகு,

1மேஜைக் கரண்டிகடலை பருப்பு,

3 காய்ந்த மிளகாய்,

2மேஜைக் கரண்டி எண்ணெய்,

1/2 தேக்கரண்டி சீரகம்,

கருவேப்பிலை,

செய்முறை - 

திணை அரிசி மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ,நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், தயார் செய்துள்ள மாவில் சேர்த்து கலக்கவும்.

மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து குழி பணியாரம் மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

குழிப் பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து மாவை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு முறுகலாக சுட்டு எடுக்கவும்.

மிகவும் ஆரோக்கியமான திணை அரிசி குழிப்பணியாரம் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News