25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


கறிவேப்பிலை சாகுபடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கறிவேப்பிலை சாகுபடி.

கறிவேப்பிலைபொதுவாக எல்லவகையான மண்வகைகளிலும் வளர்ந்துமகசூல் கொடுக்கும்தன்மையுடையது. ஆனால்ஊட்டமிக்க செம்மண்வகை மிகவும்ஏற்றது. பொதுவாகநீர் தேங்காதமண் வகையாகஇருந்தால் நன்றாகவளரும் தன்மையுடையவை. கறிவேப்பிலையில் டி.டபிள்யூ-1,டி.டபிள்யூ-2என்ற ரகங்கள்உள்ளன. இந்தரகங்கள் அதிகஎண்ணெய் சத்துமற்றும் வாசனையும்கொண்டதாகும்.

சாகுபடி முறைகள்

கறிவேப்பிலைபொதுவாக விதைமூலம் உற்பத்திசெய்யப்படுகிறது. நன்குபழுத்த பழங்களைபறித்து உடனேதோல் நீக்கியோஅல்லது அப்படியேநில மேடைபாத்திகளில் வரிசையாகஊன்ற வேண்டும்.விதைத்த20 நாட்கள்கழித்து முளைக்கஆரம்பிக்கும். பின்புஇரண்டு முதல்மூன்று மாதநாற்றுக்களை பிடுங்கி,கலவை மண்நிரப்பிய பாலித்தீன்பைகளில் நட்டு,பாதுகாக்க வேண்டும்.ஒரு ஆண்டுமுதல் ஒன்றரையாண்டுவயதுடைய நாற்றுகளையேநடவுக்கு பயன்படுத்தவேண்டும்.

நிலத்தைமூன்று அல்லதுநான்கு முறைநன்றாக உழவுசெய்ய வேண்டும். பின்பு நடவுக்குஒரு மாதத்திற்குபின் 4 அடிமுதல் 6 அடிவரை இடைவெளியில்வரிசையாக 30 செ.மீஆழம் குழிதோண்டிஆரப்போட வேண்டும். அதன்பின் 10 கிலோமுதல் 15 கிலோமக்கிய தொழுஎருவை மேல்மண்ணுடன் கலந்துகுழிகளை நிரப்பவேண்டும். கோடைகாலத்தில் இளஞ்செடிகளுக்குநிழல் அமைத்தல்முக்கியமானதாகும். நாற்றுகளைநட்டவுடன். நீர்ப்பாய்ச்சுதல்அவசியமாகும். பின்புநட்ட மூன்றுநாட்கள் கழித்துஉயிர் தண்ணீர்பாய்ச்ச வேண்டும்.

வருடம்ஒரு மரத்திற்கு 15 முதல் 20 கிலோவரை தொழுஎரு அல்லதுகம்போஸ்ட் இடவேண்டும். மேலும் 150 கிராம் தழைச்சத்து, 25 கிராம் மணிச்சத்து,50 கிராம் சாம்பல்சத்து கலந்துமண் அணைக்கவேண்டும். அதன்பின்தேவைக்கேற்ப வருடத்திற்குவருடம் உரஅளவினை அதிகப்படுத்திசெல்ல வேண்டும்.

பொதுவாககறிவேப்பிலை தோட்டத்தில்களைகள் இல்லாமல்பார்த்துக் கொள்ளவேண்டும். ஆகையால்செடியைச் சுற்றியுள்ளகளைகளை வெட்டிசுத்தம் செய்து,வட்டம் போட்டுதண்ணீர் பாய்ச்சவேண்டும். மேலும்மழை இல்லாதகாலங்களில் காய்ந்தமண்ணின் ஈரப்பதம்காப்பதோடு, செடிநன்றாக வளரஏதுவாகிறது. 1 மீட்டர்உயரம் வளர்ந்தவுடன்கவாத்து செய்துமட்டம் போடவேண்டும். இலைஅறுவடைக்கு10 நாட்களுக்குமுன்பு மருந்துதெளிப்பதை நிறுத்திவிடவேண்டும். அறுவடைநாட்களில் மருந்துதெளிப்பதை தவிர்க்கவேண்டும்.

ஒருஆண்டு கழித்து,ஒரு எக்டேர்நிலத்தில்400 கிலோகறிவேப்பிலை மகசூல்கிடைக்கும். இரண்டு,மூன்று வருடங்கள்கழித்து ஒருஎக்டேருக்கு2500 கிலோவும்,ஐந்து வருடங்கள்கழித்து3500 முதல்5000 கிலோ வரையும்கறிவேப்பிலை மகசூல்கிடைக்கும். நன்குபாதுகாத்து வளர்க்கப்பட்டமரம் 25 வருடங்கள்வரை நல்லமகசூல் கொடுக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News