25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சின்க்யூஃபீல்ட் கோப்பை செஸ்: இந்தியாவின் பிரக்ஞானந்தா  வெற்றி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சின்க்யூஃபீல்ட் கோப்பை செஸ்: இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி!

செயின்ட் லூயிஸ் (அமெரிக்கா): 'கிராண்ட் செஸ் டூர்' 11-வது சீசன் மொத்தம் 5 தொடர்களாக நடைபெற்று வருகிறது. இதன் 5-வது மற்றும் கடைசி தொடரான 'சின்க்யூஃபீல்ட் கோப்பை' செஸ் போட்டி, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உட்பட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

போட்டிக் களம்:

நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, கேண்டிடேட்ஸ் தொடரின் சாம்பியனும், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள உக்ரைனின் சிந்தரோவை எதிர்கொண்டார்.

வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இப்போட்டியின் 67-வது நகர்த்தல் வரை இரு வீரர்களும் சமநிலையில் இருந்தனர்.

பின்னர் 82-வது நகர்த்தலில் சிந்தரோவ் செய்த சிறிய தவறைச் சரியாகப் பயன்படுத்திய பிரக்ஞானந்தா, இறுதியில் 95-வது நகர்த்தலில் அபார வெற்றி பெற்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News