25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள்,  717 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற உத்தரவு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள்,  717 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற உத்தரவு.

 வழிபாட்டுதலங்கள், பஸ்ரெயில்நிலையம்,கல்விநிறுவனங்கள் ,பஸ்நிலையம், கல்விநிறுவனங்கள்அருகே 500 மீட்டர்தொலைவுக்குள் செயல்படும்டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு. 

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ்-ரெயில் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் டாஸ்மாக் கடைகளை கணக்கெடுத்து மூட முதல் அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. ஏற்கனவே கோவில், கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று அரசு இடமாற்றம் செய்து வந்தது. புதிதாக பஸ் நிலையம் அருகில் உள்ள, டாஸ்மாக் கடைகளையும் அகற்ற முடிவு செய்து இருப்பது ,பொதுமக்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

குறிப்பாக 500 மீட்டருக்குள் இந்த கடைகள் வந்தால், அவற்றை 2 வாரங்களுக்குள் அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.  தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய், அவர்களின் இந்த  உத்தரவு, அவர் ஆட்சியை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை  மக்களுக்கு வந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *