25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


( செஸ் ) சதுரங்க விளையாட்டின் வரலாறு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

( செஸ் ) சதுரங்க விளையாட்டின் வரலாறு .

 இந்தியாவில் சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முன் செஸ் விளையாட்டு முதன்முதலில் சதுரங்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பண்டைய இந்திய போர்ப்படையின் அமைப்பை அடிப்படையாக கொண்டது. ஒரு போர்ப்படையில் இருக்கும் யானை, குதிரை, மந்திரி, சிப்பாய்கள், ராஜா போன்ற உருவங்கள் ரூக், நைட், பிஷப், பான், கிங் என்ற பெயரில் சதுரங்கத்தில் இருக்கும். 

 செஸ் விளையாட்டு  ராஜாவை எதிரியிடம் இருந்து காக்க வேண்டும் அல்லதுராஜா எங்கும் நகராதபடி சிக்கிக்கொண்ட நிலையில் தோல்வி அடைவது என்பதே சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை.

இந்தியாவில் இருந்து அன்றைய பெர்சியா நாடான இன்றைய ஈரானுக்கு அறிமுகமான போது 'சத்ரஞ்ச்' எனசதுரங்க விளையாட்டு அழைக்கப்பட்டது. அரபு தேசத்தில் இருந்துஸ்பெயின் மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவியபோது செஸ் விளையாட்டாகபுகழ்பெற்றது.

இந்தியாவில் சதுரங்கம் ஆடப்பட்டபோது, ஆரம்பத்தில் ராணிக்கு முழுமையாக சக்திஎதுவும் கிடையாது. இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் அறிமுகம் ஆன பிறகு, ராணிக்கு முழு சக்தி வழங்கப்பட்டு  ,வேறு சில மாற்றங்கள் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.

பிரான்ஸ் நாட்டில் உலக செஸ் அமைப்பு 1924-ல் உலகின் பெரும்பாலான நாடுகளில் விரும்பி விளையாடப்படும் ஒன்றாக பிரபலமடைந்த நிலையில் தொடங்கப்பட்டது. பல்வேறு தந்திரமான நகர்த்தலுக்கு பின்னர், எதிரிப்படையின் ராஜா எங்கும் தப்பிக்காதபடி 'செக்மேட்' செய்யும் போது ஆட்டம் நிறைவடையும். அதே வேளையில், ராஜா செக்கில் இல்லை, ஆனால் எந்த காயையும் நகர்த்த முடியாது என்ற நிலையில் ஸ்டேல்மேட் அல்லது ஆட்டம் டிரா என்ற நிலையில் நிறைவு பெறும்.

இதை உன்னிப்பாக கவனிக்கும்போது மூளைக்கு கடுமையான சவால் விடும் விளையாட்டு என்பதை உணரலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News