25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இணையத்தை கலக்கும் குண்டு பென்குயின்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இணையத்தை கலக்கும் குண்டு பென்குயின்

குழந்தைகள் கொழுகொழு வென இருந்தால் யாருக்குத் தான் பிடிக்காது? கன்னத்தைக் கிள்ளுவதும், கொஞ்சுவதும் என அன்புத் தொல்லை செய்வார்கள். இது மனிதக் குழந்தைகளுக்கு மட்டும் நடப்பதல்ல, விலங்குகளுக்கும் நடக்கும். இப்படித்தான் ஒரு குண்டு பென்குயின் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ளது.

தென் துருவத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே வாழ்பவை பென்குயின்கள். பறக்க முடியாத இந்தப் பறவைகள் இரு கைகளை அசைத்துப்பனியில்நடந்துசெல்வதேஅழகாகத்தான்இருக்கும்.ஆஸ்திரேலியாவின்மெல்போர்ன்நகரில்உள்ளகடல்வாழ்உயிரினங்கள் சரணாலயத்தில் ஜனவரி  30, 2024 அன்று அவகோடா காய் அளவே உள்ள முட்டையிலிருந்து பிறந்தது பென்குயின். பெஸ்டோ எனும் ஒன்பதே மாதங் களில் மடமடவென வளர்ந்து 22.5 கிலோ எடையை அடைந்து விட்டது.

தினமும் 25 மீன்கள் உண்கிறது. பொதுவாக இதன் இனத்தை சேர்ந்த பென்குயின்கள் 18 கிலோ வரையே வளரும். அதன் அதீத எடை காரணமாக மிகவும் பரும னான தோற்றதைப் பெற்றுள்ளது. தவிர பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் பென்குயின்களுக்கு உடல் முழுக்க முடிகள் நிறைந் திருக்கும். இது மிகச் சிறியவயதிலேயே உயரமாகவும்,பருமனாகவும் வளர்ந்து விட்டதால் பார்ப்பதற்கு "டெடி பியர் " பொம்மை போல் அழகாக உள்ளது.எனவே இதைபார்ப்பதற்கு  பல ரசிகர்கள் சரணாலயத்திற்கு  வருகின்றனர். இன்ஸ்டா, யு டியூப், மீம்ஸ் என  அனைத்திலும் வீடியோ பதிந்து  எழுதி வருகின்றனர். இதனால்  இதற்கு உலகெங்கிலும் ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News