உலக பாட்மிண்டன் பெண்கள் பிரிவில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்.
30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்போட்டி டெல்லியில் நடந்து வந்தது.சொந்த மண்ணில் இந்த போட்டியில் இந்தியா சார்பில் 18 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களில் பெண்கள் இரட்டையரில் திரிஷா ஜாலி - காயத்ரி கோபி சந்த் மட்டும் வெண்கலப்பதக்கம் வென்று ஆறுதல் அளித்தனர். எதிர்பார்க்கப்பட்ட பி.வி. சிந்து 3-வது சுற்றுடன் வெளியேறினார்.
நேற்று நடந்த பரிசளிப்பு விழாவில் பதக்கத்தை பெற் றுக் கொண்ட காயத்ரி கூறு கையில், 'இது எங்களுக்கு மிகச்சிறந்த வாரம். மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. வெண்கலம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பதக்கம் எங்களது வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத ஒன்றாக நிலைத்திருக்கும்' என்றார்.
0
Leave a Reply