25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சென்னையை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ,கூகுள் குரோம் பிரவுசரை வாங்க ரூ.2.9 லட்சம் கோடிகளுக்கு ஆஃபர்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சென்னையை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ,கூகுள் குரோம் பிரவுசரை வாங்க ரூ.2.9 லட்சம் கோடிகளுக்கு ஆஃபர்!

சென்னையை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர், கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரை ரூ.2.9 லட்சம் கோடிக்கு  வாங்க முன்வந்துள்ளார். அமெரிக்க நீதிமன்றம் கூகுள் மீது விதித்த கட்டுப்பாடுகளுக்கு பிறகு இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரான இவர், அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். ஓபன்ஏஐ மற்றும் கூகுள் பிரெய்ன் போன்ற முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

 2022,ல் பெர்பிளெக்சிட்டி ஏஐ என்ற தனது சொந்தAI நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலீடு செய்துள்ளார்.அமெரிக்க நீதிமன்றம் கூகுள் நிறுவனம் குரோம் பிரவுசரை பல சாதனங்களில் முன்பே நிறுவி, சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாக தீர்ப்பளித்தது. இதனால், கூகுள் தனது சில தயாரிப்புகளை விற்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தியே அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்த பிரமாண்டமான திட்டத்தை முன்வைத்துள்ளார்.சென்னை இளைஞர் கையில் கூகுள் குரோம் பிரவுசர் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News