மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் உள்ள சிறிய ரயில் நிலையங் களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் அம்ரித் பாரத் திட்டம் துவங்கப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் உள்ள சிறிய ரயில் நிலையங் களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் அம்ரித் பாரத் திட்டம் துவங்கப்பட்டது.அதிக வருவாய், பாரம்பரிய நகரங் கள், முக்கிய வழித்தடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கோட்டத்திற்கு 15 ரயில்வே ஸ்டேஷன் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது.மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உட்பட 15 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது.
ஸ்டேஷன் போர் டிகோ பகுதியில் அலங்கார முகப்பு அமைத்தல், நடை மேடை மேம்படுத்துதல், வாகன காப்பகம், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள், லிப்ட் வசதி, நிழற்குடை வசதிகள் உள்ளிட்ட பல் வேறு வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டது. ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அதிகளவில் பயணிகள் வந்து செல்லும் நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இங்கு இரண்டாவது நுழைவாயில், காத்திருப்போர் அறை, நடைமேடை மேற்கூரை பணிகள் மந்தமாக நடக்கிறது. லிப்ட் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் மற்றும் செயல் பாட்டில் உள்ளது . விரைவில் பணிகளை முடித்து மக்கள் சிரமத்தை குறைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply