25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முன்னாள் நிதி அமைச்சரும், பிரதமருமான மன்மோகன் சிங் காலமானார். 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முன்னாள் நிதி அமைச்சரும், பிரதமருமான மன்மோகன் சிங் காலமானார். 

  பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், சக்வால் மாவட்டத்தில் பிறந்த மன்மோகன் சிங், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு குடி பெயர்ந்தார். பஞ்சாப் பல்கலையிலும், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையிலும், பொருளாதார படிப்பை முடித்தார். அதன் பின், பொருளாதார பேராசிரியராக பணியை துவங்கினார்.

மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர், நிதிச் செயலர், ரிசர்வ் வங்கி கவர்னர், திட்டக் குழு துணை தலைவர் போன்ற முக்கிய பதவிகளை பல்வேறு காலக் கட்டங்களில் வகித்துள்ளார். 1990ல் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின், பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

கடந்த, 1991ல் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில், நிதி அமைச்சராக பதவி வகித்தார்.அப்போது இவர் கொண்டு வந்த தாராள மயமாக்கல் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியது. 

மயக்கமடைந்த 'மன்மோகன் சிங்கை உறவினர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில், 26 december இரவு 8:06  மணிக்கு அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி, இரவு 9:51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக, எய்ம்ஸ் மருத்துவ மனை, அதிகாரபூர்வமாக அறிவித்தது.    நாட்டின் பிரதமராக இரண்டு முறை இருந்தவர் மன்மோகன் சிங். ஜவஹர்லால் நேருவுக்கு பின், முழு ஆட்சி காலத்தை நிறைவு செய்த பின் மீண்டும் பிரதமரானவர் என்ற பெருமைக்கு உரியவர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News