இந்திய வீரர் பிரவீன் சர்மா ஆசிய யூத் பாரா விளையாட்டு குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். 55 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது.
.ஆசிய யூத் பாரா விளையாட்டு துபாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் 99 பேர் (61 வீரர், 38 வீராங்கனை) பங்கேற்கின்றனர்.
, 13.59 மீ., எறிந்தஇந்தியாவின் பிரவீன் சர்மாஆண்களுக்கான குண்டு எறிதல் ('எப் 11-13') பைனலில் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் தேவிபிரசாத் (8.08 மீ.,) 5வது இடம் பிடித்தார்.'எப் 32-34' பிரிவு குண்டு எறிதல் பைனலில் இந்திய வீரர் வினேஷ் (7.46 5.,) வெண்கலம் வென்றார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ('எப் 35-38') பைனலில் இந்தியாவின் விக் ஷீத் குமார் (30.87 மீ.,) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
('டி20') பைனலில் பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் இலக்கை, ஒரு நிமிடம், 07.07 வினாடியில் கடந்த இந்தியாவின் புவி அகர்வால் தங்கம் வென்றார். ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் ('442-47, 61-64') பைனலில் இந்தியாவின் நரேஷ் (1 நிமிடம், 00.27 வினாடி) வெள்ளி கைப்பற்றினார். பெண்களுக்கான வட்டு எறிதல் ('எப் 51-57') பைனலில் இந்தியாவின் கோகிலா (15.4 மீ.,) வெண்கலத்தை தட்டிச் சென்றார். ஆண்களுக்கான வட்டு எறிதல் ('எப்11-13') பைனலில் இந்தியாவின் பிரவீன் (34.08 .,),இர்பான் திவான் (28.12 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம்கைப்பற்றினர்.
இதுவரை 19 தங்கம், 15 வெள்ளி, 21 வெண் கலம் என, 55 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் உஸ்பெகிஸ்தான் (97 தங்கம், 55 வெள்ளி, 35 வெண்கலம்) உள்ளது.
0
Leave a Reply