25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கால்களில் வீக்கம் வருவது ஏன்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கால்களில் வீக்கம் வருவது ஏன்?

கால்கள் வீங்கும் தொல்லை மூத்த குடிமக்களில் பலருக்கு ஏற்படும். இதற்கு மூன்று வகையான காரணிகள் உள்ளன.

இரவில் நெடுநேரம் படுத்த நிலையில் இருப்பதால், காலையில் சிலருக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் வரலாம். இது சாதாரணமான வீக்கம்தான். கவலைப்படத் தேவையில்லை. சிறிது தூரம் நடந்தால் வீக்கம் குறைந்துவிடும்.

சமயங்களில் வேறு ஏதேனும் நோயின் அறிகுறியாகவும் கால்களில் வீக்கம் வரலாம். ரத்தச்சோகை, சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, இதயம் செயலிழப்பு, நுரையீரல் செயலிழப்பு போன்ற தீவிரமான பிரச்னைகளின்வெளிப்பாடாகவும் கால்கள் வீங்கும். இதுமருத்துவ அவசரநிலை. உடனே மருத்துவர்உதவியை நாட வேண்டும்.

இதில் உட்கொள்ளும் மருந்துகளின் காரணமாகவும் கால்கள் வீங்கும். உதாரணம்: ஆம்லோடிப்பின் மாத்திரை.

ஏதேனும் அறுவை சிகிச்சைகள் செய்துகொண்ட பின்னர், முதியோர்கள் படுக்கையிலேயே தொடர்ந்து படுத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் கால்களில் உள்ள அசுத்தரத்தம், ரத்தக்குழாயில் உறைந்துவிடும். இதுபோல் ரத்தப்போக்கைத் தடை செய்வதால் கால்களில் வீக்கம் வரும். இதற்கு Deep Venous Thrombosis என்று பெயர். இதுவும் தாமதமின்றி உடனே கவனிக்க வேண்டிய பிரச்னை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News