25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இணையத்தில் அவ்வப்போது பயணர்களின் தகவல்கள் திருடப்படுகின்றன .1600 கோடி 'லாகின்' தகவல் கசிவு. பாஸ்வேர்டை மாற்றுங்கள்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இணையத்தில் அவ்வப்போது பயணர்களின் தகவல்கள் திருடப்படுகின்றன .1600 கோடி 'லாகின்' தகவல் கசிவு. பாஸ்வேர்டை மாற்றுங்கள்'

உலகளவில், 'ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான்' உட்பட பல் வேறு இணைய சேவை பயணர்களின், 1,600 கோடி 'லாகின்' தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில் பலவற்றில் உள்நுழைவதற்கானபாஸ்வேர்டு தகவல்களும் அடங்கியுள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.அந்த தகவல்கள்  'சைபர்' குற்றங்கள் மற்றும் வியாபார உத்திகள் வகுக்க பயன்படுத்தப்படுகின்றன. உலகளவில் மிகப்பெரிய தகவல் திருட்டு நடந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பல்வேறு  இணைய சேவைகளுக்கு பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகள், பாஸ்வேர்டு போன்றவற்றின், 1,600 கோடி விபரங்கள், 'டார்க் வெப்' எனப்படும் மறைமுக இணைய சர்வரில் விற்பனைக்கு வந்துள்ளன.இவை, தனித்தனி தரவு தொகுப்புகளாக கசிந்துள்ளன. ஒவ்வொரு தொகுப்பிலும், பல கோடி தகவல்கள் இடம் பெற்றிருக்கலாம் என சர்வதேச இணைய ஆய்வு நிறுவனங்களான, 'சைபர்நியூஸ்' மற்றும் 'கீப்பர் செக்யூரிட்டி' கூறியுள்ளது.

. 'ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட்' பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் போன்ற நிறுவனங்களின் பயணர் தகவல்கள்  ,ஆன்லைன் சேவைகள், மற்றும் செயலிகளில் இருந்து திருடப்பட்டவை.இதில் அடங்கி உள்ளன. இந்திய பயணர்களின் தகவல்களும் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இணைய கணக்குகளின் விபரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படியும் ,உடனடியாக பாஸ்வேர்டுகளை புதிதாக மாற்றும்படியும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *