25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மாடித் தோட்டத்தில் எளிதாக வளர்க்கக் கூடிய முக்கிய கீரை வகைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாடித் தோட்டத்தில் எளிதாக வளர்க்கக் கூடிய முக்கிய கீரை வகைகள்.

பாலக் கீரை, பசலைக்கீரை, தண்டு கீரை, மணத்தக்காளி கீரை மற்றும்பொன்னாங்கண்ணி கீரை. அகலமான தொட்டிகள் அல்லது பேக்குகளில்(Growbags) தேங்காய்நார்க்கழிவு மற்றும்மண்புழு உரம் கலந்த மண்ணை நிரப்பி எளிதாகப்பயிரிடலாம். 

மாடித் தோட்டத்தில் வளர்க்கும் கீரை வகைகள்

பாலக் கீரை - சத்துக்கள் நிறைந்த இக்கீரை சிறிய தொட்டிகளிலும் மிக விரைவாக வளர்ந்து பலமுறை அறுவடை தரக்கூடியது.

பசலைக் கீரை - கொடி வகைப் பசலை மற்றும் தண்டுப் பசலை இரண்டும் மாடித்தோட்டத்திற்கு மிகவும் ஏற்றது,.

அரைக்கீரை மற்றும் முளைக்கீரை - குறைந்த ஆழமுள்ள பாத்திகள், தொட்டிகளில் விதைத்து 25 முதல் 30 நாட்களில் அறுவடை செய்யலாம்.

மணத்தக்காளி கீரை - வயிற்றுப்புண் ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது, நிழல் மற்றும் வெயில் இரண்டிலும் நன்றாக வளரும்.

பொன்னாங்கண்ணி கீரை - தண்டுப் பகுதியை ஒடித்து நடுவதன் மூலமே எளிதாக புதிய செடிகளை உருவாக்கலாம்.

சம பங்கு செம்மண், மண்புழு உரம் அல்லது தொழுஉரம் மற்றும் தேங்காய் நார்க்கழிவு (Coco peat) கலக்க வேண்டும்.

நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 மணி நேரம் நேரடி சூரிய ஒளிபடும் இடத்தில் தொட்டிகளை வைக்க வேண்டும்.

தினமும் மிதமான அளவில் நீர் ஊற்ற வேண்டும், தேங்க விடக்கூடாது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News