25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இழந்ததை மீட்க...உஜ்ஜயினி கால பைரவர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இழந்ததை மீட்க...உஜ்ஜயினி கால பைரவர்.

மத்தியபிரதேசம் உஜ்ஜயினி நகரில் கால பைரவர் கோயில் உள்ளது. ஷிப்ரா நதிக்கரையில் உள்ள இக்கோயிலில் சுவாமியின் தலை மட்டும் பெரியளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவரை தரிசித்தால் இழந்ததை மீட்கலாம்.

அந்தகன் என்னும் அசுரன் தீயின் நடுவே நின்று, தவம் செய்து சிவனிடம் வரங்களை பெற்றான். அதனால் ஆணவம் கொண்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்தான். சிவனிடம் முறையிட்டனர் தேவர்கள். அசுரனை அழிக்க அவர் முடிவெடுத்தார். காலபைரவரை உருவாக்கி அவனைக் கொன்றார். மகிழ்ச்சியடைந்த தேவர்கள் கால பைரவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த வரலாற்றின் அடிப்படையில் இப்பகுதியை சேர்ந்த மன்னர் பத்ராசென் என்பவர் காலபைரவர் கோயிலை கட்டினார்.

மால்வா கட்டடக்கலை பாணியில் கோட்டை அமைப்பில் கோயில் உள்ளது. கருவறையில் சுவாமியின் உருண்டை வடிவத் தலையில் கண்கள், மூக்கு, வாய் மட்டுமே உள்ளன. காபாலிகா, அகோரி வழிபாட்டு முறைப்படி தாந்திரீக பூஜை நடக்கிறது. பூஜையில் பூமாலை, கருப்புக்கயிறு, ஊதுபத்தி, சூடம், மதுபானம் இடம் பெறுகிறது. விநாயகர், மகாவிஷ்ணு, தேவியின் சிற்பங்கள் பாறையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளன.

பைரவர் சன்னதியின் அருகிலுள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கமும், எதிரில் நந்தியும் உள்ளன. கருவறைக்கு வலது புறத்தில் பாதாள பைரவி சன்னதி உள்ளது. தரை மட்டத்திற்குக் கீழே இரண்டடி சதுர வடிவ நுழைவு வாயிலில் தவழ்ந்து சென்றே அம்மனை தரிசிக்க வேண்டும்.

கருவறையின் எதிரில் கூம்பு வடிவத்தில் தீபத்துாண் உள்ளது. நீண்ட ஜடாமுடியும், உடல் எங்கும் திருநீறு பூசிய சாதுக்கள் கோயிலுக்கு வெளியே தங்கியுள்ளனர். இங்கு தலவிருட்சம் ஆலமரம். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் எதிரி தொல்லை மறையும். நீண்ட கால நோயும் விலகும்.

இழந்தவை மீண்டும் கிடைக்கும். வாகனப் பயணம் சுகமாக அமைய முந்திரி மாலை அணிவிக்கின்றனர். காலபைரவரின் வாகனமான நாய் சிலை வாசலில் உள்ளது. விருப்பம் நிறைவேற சனிக்கிழமைகளில் இங்குள்ள நாய்களுக்கு பிஸ்கட் அளிக்கின்றனர். ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவர் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News