டி.என்.பி.எல்.: இறுதிப்போட்டிக்கு கோவை அணி தகுதி.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு மதுரை அணி ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், 2வது தகுதிச்சுற்றில் கோவை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கோவை, திருச்சி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோவை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய திருச்சி அணி, கோவை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.4 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை அணி அபார வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மதுரை அணியுடன் கோவை அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
0
Leave a Reply