25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில்உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் கொங்கு மண்டல பகுதியில் அமைந்த ஏழு சிவத்தலங்களில் முதன்மை யா னது என்ற பெருமை கொண்டது. இதன் புராதனப் பெயர்  திருக்கொடிமாடச்செங்குன்றுர் ஆகும். திருச்செங் கோட்டை  இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்பார்கள்.

சிவன் கோவில்களில் சிவ பெருமான் லிங்க திரு மேனியாகவும், சக்தி தனிச் சன்னதியிலும் இருப்பதே வழக்கம். ஆனால் திருச்செங் கோடுமலையில் மட்டும் சிவனும். சக்தியும் ஆண் பாதி, பெண்பாதி உருவமான அர்த்தநாரி யாக காட்சி அளிப்பது விசேஷமான ஒன்று. திருச்செங்கோடுமலை 6 கிலோமீட்டர் பரப்பள வுடன் பரந்து விரிந்து காணப்படுகிறது. இரு மலைகள் ஒன்றாக இணைந்து இரு சிகரங் களை கொண்டது போல பிரமாண்டமாக காட்சி தருகிறது. இந்த மலையின் மீதுதான் அர்த்தநாரீஸ்வரர் கோவில் எழிலுற அமைந்துள்ளது. 1,901 அடி உயரம் கொண்ட மலைமீதுள்ள கோவிலை அடைய 1,200 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். கோவிலின் தலவிருட்சம் இலுப்பை மரம் ஆகும்.

பிருங்கி முனிவர், சிறந்த சிவ பக்தர். அவர் சிவனை மட்டுமே வழிபடுவார். கயிலாயத்தில் ஈசனின் அருகில் இருக்கும் உமாதேவியைக் கூட வழிபடமாட்டார். அமை யப்பன் இருவருக்கும் இடையே வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து சிவனை மட்டுமே வழிபடுவார்.இதனால் கோபம் அடைந்த பார்வதி, "முனிவரே சக்தியாகிய என்னை அவ ம தித்ததால் சக்தி இழந்துபோவீர் " என சாபமிட்டாள். உடனே பிருங்கி முனிவர் சக்தி இழந்து நிற்கக்கூட முடியா மல் கீழே விழுந்தார். உடனே சிவபெருமான், "நானும் சக்தி யும் ஒன்றுதான். சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லாமல் சக்தியும் இல்லை” எனக்கூறி உமா தேவிக்கு தன் இடப்பாகத்தில்இடம்கொடுத்தார்.அப்படி அவர்கள்இருவரும்இணைந்தவடிவமே 'அர்த்தநாரீஸ்வரர்' ஆகும். 'அர்த்தம்' என்றால் 'பாதி' என்றும் 'நாரி' என்றால் 'பெண்' என்றும் பொருள். பாதி பெண் ணாக அமைந்த வடிவம் என்பதால் இப்பெயர் பெற்றது திருச்செங்கோடு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News