25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பணம் பத்தா இருக்கணும், பொண்ணு முத்தா இருக்கணும், முறையும் அத்தை மகளா இருக்கணும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பணம் பத்தா இருக்கணும், பொண்ணு முத்தா இருக்கணும், முறையும் அத்தை மகளா இருக்கணும்.

நிச்சயதார்த்தம் என்பதை பரிசம் போடுதல் எனக் கூறலாம். அதாவது 'பரிசு கொடுத்தல்' என்பதுதான் மருவிப் பரிசம் என்றாகிவிட்டது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். நிச்சயதார்த்தத்திற்கும் பரிசு கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?

அந்தக் காலத்தில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யவேண்டுமானால், ஆண்மகன் தன் சம்பாத்தியத்தில் பொருள் சேர்த்து ஒரு பெரிய தொகையைப் பெண் வீட்டார்க்கு கொடுக்கவேண்டுமாம். தனக்கு மனைவியாகத் தன் வீட்டிற்கு வரப்போகிறவளை பேணி வளர்த்த குடும்பத்திற்காக ஒரு ஆண் கொடுக்கும் பரிசுதான் அந்தத் தொகை. அப்படி பரிசு கொடுக்க நம்மிடம் நிறைய பணம் இருக்க வேண்டும். ஏனெனில், பெண்ணின் அழகு மற்றும் குடும்ப சூழ்நிலை பொறுத்து அந்தத் தொகை அதிகரிக்கும். அதனால்தான் பணம் பத்தா இருக்கணும்.

பின் பெண் முத்துபோல அழகாக மற்றும் நல்ல குணங்களை கொண்டவளாக இருக்கணும். முறை அத்தைமகளாக இருந்தால் பணம்கூடக் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News