25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


2,600 வகையான பனை மரங்கள் உள்ளன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2,600 வகையான பனை மரங்கள் உள்ளன.

பனை குடும்பத்தில் உலகம் முழுவதும் 200 இனங்களை சேர்ந்த 2,600 வகையான பனை மரங்கள் உள்ளன. இதில், இந்தியாவில் சுமார் 106 இனங்கள் பரவியுள்ளன.

இந்தியாவில் பனை குடும்ப மரங்கள் பயிரிடப்பட்ட வகை, அலங்கார வகை, காட்டு வகை என 3 குழுக்களாக வகைப்படுத் தப்படுகின்றன. பயிரிடப்படும் பனை மரங்களில், கோகஸ் நுசி பெரா என்ற தாவரவியல் பெயர் கொண்டதென்னை மரம் இளநீர், தேங்காய்களை தருவதால் 'சொர்க்கத்தின் அதிசய பனை' என அழைக்கப்படுகிறது.

இதற்கடுத்து, நுங்கு பதநீர் தரும் போராசஸ் பிளாபெல்லிபர் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பனை மரங்கள் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மரம் ஆகும். இந்தியாவில் 8½ கோடி பனை மரங்கள் உள்ளன, அவற்றில் 4 கோடி தமிழ்நாட்டில் உள்ளன. பனை மரத்தை கற்பகதரு என அழைப்பர். அலங்கார பனையில், கோதை பனை என்ற பனையின் இலைகளில் விசிறிகள், பாய்கள், குடைகள் ஆகியவை தயார் செய்யப்பயன்படுகின்றன. தாலிபோட் பனை என்பது பனை மரக்குடும்பத்திலேயே 100 அடி உயரம் தாண்டி வளரும் அற்புதமான மரம் ஆகும்.

கூந்தபனை என்பது மேற்கு தொடர்ச்சி மலைகளின் பசுமையான காடுகளில் வளர்கிறது. இதன் இலைகள் மற்றும் தண்டுகள் யானையின் விருப்பமான உணவாகும். இவ்வாறு பனை என்பது உலக அளவில் அதிசயமாக கருதப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News