ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 'பாகுபலி ராக்கெட்' என அழைக்கப்படும், 'புளூ பேர்ட் பிளாக் 2' எனும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றி கரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்கு பார்வையில் தற்போது 'இஸ்ரோ' மற்றுமொரு சாதனையை படைத்து இந்தியாவுக்கு பெருமையை சேர்த்துள்ளது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில்இருந்துநேற்றுகாலை 'பாகுபலிராக்கெட்' எனஅழைக்கப்படும்எல்.வி.எம் 3 ஏவுகலத்தின் வாயிலாக அமெரிக்காவின் 6.1 டன் எடையுள்ள 'புளூ பேர்ட் பிளாக் 2' எனும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றி கரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்ட மிகவும் அதிக எடையான 6100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து சென்ற எல். வி.எம் 3 ராக்கெட்டை 'பாகுபலி' ராக்கெட்' என அழைக்கிறோம். அதிக எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து சென்றதால் பாகுபலி என குறிப்பிடுகிறோம். ஜி.எஸ்.எல்.வி., வகையைச் சேர்ந்த, எல். வி.எம் - 3 ஏவுகலத்தின் 9வது வெற்றி; ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து 104 ஏவப்படும் 104 வது செயற்கைக்கோள்.
அமெரிக்காவின். 'புளூபேர்ட் பிளாக் 2' செயற்கைக்கோள் செலுத்தும் திட்டத்தை, எல்.வி.எம்.,3 - எம் 6 ராக்கெட் வாயிலாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த, 52வது நாளில் முடித்து இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது.
தற்போது ஏவப்பட்டுள்ள 'புளூபேர்ட் பிளாக் 2' செயற்கைக்கோள் 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் உள்ள மொபைல் போன்களுக்கான ஒலி மற்றும் ஒளி எனும் ஆடியோ, வீடியோ அழைப்புகளை 'மொபைல் டவர்'கள் இல்லாமலேயே மிகத்துல்லியமாக வழங்கும்.
இது கடலின் நடுவிலும், கண்ணாடி அறைக்குள்ளும் மிகத் துல்லியமான சேவையை வழங்கி, புதிய தலைமுறை தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தும். அதிவேக 'செல்லுலார் பிராட்பேண்ட் சேவைகளையும், எந்தவித துணை கருவிகளும் இல்லாமல் நேரடியாக வழங்கும்.
இஸ்ரோ தன் மிகக்குறைந்த எடையுள்ள செயற்கைக்கோளை அமெரிக்காவின் உதவியுடன் 1963ல் முதன்முதலில் விண்ணில் ஏவியது. அப்போது விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா 60 ஆண்டுகள் பின்தங்கி இருந்தது. தற்போது, அமெரிக்க நிறுவனமே அதன் மிக சக்தி வாய்ந்த செயற்கைக்கோளை வட்டப்பாதையில்நிலைநிறுத்த இந்திய ஆய்வு நிறுவனத்தை நாடி வந்துள்ளது. செயற்கைக்கோள் ஏவுதலில் இந்தியாவின் முன்னேற்றம்.
0
Leave a Reply