25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஆதாரைமிகஎளிதாகமின்னணுமுறையில்சமர்ப்பிக்க UIDAI இன் புதிய செயலி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதாரைமிகஎளிதாகமின்னணுமுறையில்சமர்ப்பிக்க UIDAI இன் புதிய செயலி.

இந்தியாவில் எந்த சேவைக்குச் சென்றாலும், அது ரயில் டிக்கெட் முன்பதிவாக இருக்கட்டும், அல்லது வங்கி கணக்குதொடங்குவதாக இருக்கட்டும், முதன்முதலில் கேட்கப்படுவது ஆதார் அட்டை. எப்போதும் நம் ஆதார் அட்டையை கையில் எடுத்து செல்வது சில சமயங்களில் சாத்தியப்படாமல் போகலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளது.வரும் காலங்களில்UIDAI ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலி உங்கள் போனில் இருந்தால், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உங்கள் ஆதாரை மிக எளிதாக மின்னணு முறையில் சமர்ப்பிக்க முடியும். இனி ஆதார் ஜெராக்ஸ் எடுக்க கடைகளை தேடி அலைந்து நேரம் விரயமாக்க தேவையில்லை.

 இந்த செயலியில், உங்கள் ஆதார் தகவல்கள் கியூ.ஆர். கோடு வடிவில் இருக்கும். இதை ஸ்கேன் செய்தால் போதும், உங்கள் ஆதார் சமர்ப்பிக்கப்பட்டுவிடும். மேலும், தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நீங்கள் ஆதாரை சமர்ப்பிக்கும்போது, முழுமையான விவரங்கள் தெரியும்படி வேண்டுமா, அல்லது சில தகவல்கள் மறைக்கப்பட்ட வடிவில் வேண்டுமா என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இது உங்கள் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்புக்கு உதவும்.இந்த புதிய வசதி மூலம், ஆதார் தொடர்பான சேவைகளுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும், வீணாக அலைந்து திரிவதும் முற்றிலும் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News