25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பலத்த காற்றினால் சேதமடைந்துள்ள வாழை மரங்களை நேரில் சென்று  வருவாய் மற்றும் பேரிடர்மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பலத்த காற்றினால் சேதமடைந்துள்ள வாழை மரங்களை நேரில் சென்று வருவாய் மற்றும் பேரிடர்மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், (07.10.2025) மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்களின் முன்னிலையில்,  அருப்புக்கோட்டை வட்டம் சிதம்பராபுரம்மற்றும் செட்டிக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ள வாழை மரங்களை நேரில் சென்று  வருவாய் மற்றும் பேரிடர்மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 அருப்புக்கோட்டைவட்டம், சிதம்பராபுரம் , சின்ன செட்டிக்குறிச்சி மற்றும் பெரிய செட்டிக்குறிச்சி கிராமங்களில் 05.10.2025  மாலை சுமார் 04.00 மணியளவில் பலத்தகாற்றுடன் மழை பெய்ததில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைமரங்களில், சுமார் 27.5 ஏக்கர் பரப்பளவு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்து முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதனை, தற்பொழுது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை  அதிகாரிகள்  முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

  வடகிழக்கு பருவமழையால் 27.5 ஏக்கர் பரப்பளவு சேதமடைந்துள்ள வாழை மர நிவாரணத்திற்கு அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டுமேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,  இப்பகுதிகளில் பயிர்க் காப்பீடு இல்லாத காரணத்தினால் பயிர்க் காப்பீட்டிற்கு தேவையான நடவடிக்கைகள் தோட்டக்கலைத்துறை மூலம் எடுக்கப்படவுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக பலத்த காற்றினால் பயிர்கள் சேதமடைந்துள்ளது.  இதற்கு தீர்வு காணும் விதமாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி  உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட உள்ளது.

  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இப்பகுதிகளில் கடந்த ஆண்டு சேதமடைந்த பகுதிகளை கண்காணித்து இம்முறை எவ்வித இடர்பாடுகள் ஏற்படாமலிருக்கவும், நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மேல் நடவடிக்கைகள்எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News