25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தங்கம் செய்யும் வித்தை, இப்போது கடின அறிவியலால் நனவாகப் போகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தங்கம் செய்யும் வித்தை, இப்போது கடின அறிவியலால் நனவாகப் போகிறது.

மராத்தான் ஃபியூஷனின் (Marathon Fusion)விஞ் ஞானிகள், நிஜமாகவே, அணுக்கரு இணைவு (Nuclear Fusion) மூலம் தங்கத்தை தயாரிக்க முடியும் என்று சொல்கின்றனர். டோகாமாக் என்ற உலையில், செறிவூட்டப் பட்ட மெர்க்குரி 198 ஐயும் அணுக்கரு  பிணைப்பின் போது உருவாகும் நியூட்ரான்களையும் பயன்படுத்தி, இந்த உலை ஒரு ஜிகாவாட் துாய மின்சாரம் தயாரிக்கும்.

அந்த வேதி வினையின் பக்க விளைவாக ஐந்து டன் தங்கத்தை உற்பத்தி செய்யலாம் என மராத்தான் ஃபியூஷன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அணுப் பிணைப்பு உலையின் உட்சுவர்களில், வழக்கமான லித்தியத்தை பூசுவதற்கு பதிலாக, மெர்க்குரி -198ஐ பூசுகின்றனர்.பிணைப்பின் போது உருவாகும் நியூட்ரான் கள், ஒரு சிதைவு சங்கிலியைத் துாண்டி, நிலையில்லா மெர்குரி-197ஐ தங்கம்-197 ஆக மாற்றுகின்றன.

வேதிய தங்கத்தை பிறகு தங்கத்தை எளிய வாயிலாகப் பிரித்தெடுக்க முடியும். அணுப் பிணப்பு உலையில் ஏராளமாகக் கிடைக்கும் மின் ஆற்றலோடு, தங்கமும் கிடைப் பதுதான் ஆச்சரியம். ஒரு ஜிகாவாட்- ஆண்டுக்கு, தோராயமாக 4,734 கோடி ரூபாய் மதிப்புள்ளதங்கம் கிடைப்பது பொருளாதார ரீதியாக பிரமிக்க வைக்கிறது. இது வெறும் ஆய்வக சோதனை அல்ல; இது உலை அளவில் தங்கம் தயாரிக்கும் முறை.

இந்த கண்டுபிடிப்பு இன்னும் சக வல்லுநர்களின் மதிப்பாய்வில்தான் இருக்கிறது. ஆனால்' இது ஏற்றுக்கொள்ளப் பட்டால் அணுக்கரு பிணைப்பு உலைகளுக்கு, தாராள நிதிகள் கிடைக்கும். தவிர, மதிப்புமிக்க உலோக உற்பத்தி முறைகள் அடியோடு மாறக்கூடும். அந்த காலத்தில், ரச வாதிகள், இரும்பிலிருந்து தங்கம் தயாரிக்க முயன்றனர். ரசவாதிகள் கனவு கண்ட, தங்கம் செய்யும் வித்தை, இப்போது கடின அறிவியலால் நனவாகப் போகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News