25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (24.01.2026) வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் - 2026 ஐ முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒரு வாகனம் வீதம் மொத்தம் 7 வாகனங்கள் மூலம் இளம் வாக்காளர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து  செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில்விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர்  அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிப்பதோடு, வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கவுள்ளது.எனவே, அனைத்து வாக்காளர்களும் தங்கள் பகுதிகளுக்கு வரும் இந்த வாகனங்களை பயன்படுத்தி வாக்குப்பதிவு குறித்த செயல் விளக்கத்தை அறிந்து கொண்டு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News