25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கூட்டுறவு அங்காடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு கூட்டுறவு அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யும் திட்டத்தினை (19.10.2026) தொடங்கி வைத்தார். 

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரிசி விலை உயர்வை கட்டுபடுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான அரிசி கிடைப்பதை உறுதிபடுத்தும் வகையிலும் விலை நிலைப்படுத்தும் திட்டத்தின் கீழ் “ஏ” தர சன்னரக அரிசியை கூட்டுறவு பண்டக சாலை வாயிலாக பொதுமக்களின் தேவைக்கேற்ப அதிகபட்சமாக குடும்பம் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் 1 கிலோ ரூ.30 என்ற விலையில் வழங்கிட ஆணை பிறப்பித்துள்ளார்கள். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்றையதினம் முதல் இத்திட்டத்தினை விரிவுபடுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெங்காயம் விலை அதிகரித்த நிலையில் தமிழக அரசின் சார்பில் நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் குறைவான விலையில் கிடைக்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் கிலோ ரூ.30 என்ற விலையில் சன்னரக அரிசி விற்பனை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களான புழுங்கல் பொன்னி அரிசி ஒரு கிலோ ரூ.60, துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.130, உளுத்தம் பருப்பு ஒரு கிலோ ரூ.140, பூண்டு ஒரு கிலோ ரூ.240, மல்லி (தனியா) ஒரு கிலோ ரூ.240, மிளகாய் ஒரு கிலோ ரூ.330 என்ற குறைவான விலையில் வெளிச்சந்தையை விட விலை குறைப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு அரசின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் வாயிலாக குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. திருப்பதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகபொது மேலாளர் திரு.பால் பாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News