25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருச்சுழி-அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக 13.06.2025 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருச்சுழி-அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக 13.06.2025 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.

திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (COPA)  நிலஅளவையர் (SURVEYOR) மின்சார பணியாளர்(ELECTRICIAN)  இயந்திர வேலையாள் (MACHINIST) ஆகிய நான்கு தொழிற்பிரிவுகளிலும் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி முடித்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலைவாய்ப்பு  ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்களது கல்வி மற்றும் சாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.50/- நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியின் போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/- கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா சீருடை (தையற்கூலியுடன்)  விலையில்லா மிதிவண்டி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா மூடுகாலணிகள், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின்கீழ் மற்றும் மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும்.

 எனவே, திருச்சுழி சுற்று வட்டாரங்களில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான விபரங்களை பெற  70100-40810,  94864-62585, 76038-28709, 95669-29663 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News