விளையாட்டு போட்டிகள்: இந்திய வீரர்களின் அசத்தல் வெற்றி!
ஸ்குவாஷ்: அபய் சிங் சாம்பியன்.
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
உலக தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள அபய் சிங், இறுதிப் போட்டியில் ஹாங்காங்கைச் சேர்ந்த ஹென்றி லுங்கை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் அபய் சிங் 11-7, 6-11, 3-11, 11-5, 12-10 என்ற செட் கணக்கில் ஹென்றி லுங்கை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.
சென்னையைச் சேர்ந்த அபய் சிங்கிற்கு இது 13-வது சர்வதேச பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply