சோயா-65 .
தேவையான பொருட்கள்
2கப்சோயா (Meal maker) ,2டேபிள் ஸ்பூன் கடலை மாவு,
2டேபிள் ஸ்பூன் மைதா,2டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1டீஸ்பூன் மிளகாய்த்தூள்,
1டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்,1டீஸ்பூன் தனியாதூள்,
1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்,
1டீஸ்பூன் எலுமிச்சை சாறு,தேவையான அளவு உப்பு,
தேவையான அளவுபொரிக்க எண்ணெய்.
செய்முறை :
சோயா உருண்டைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.பின்னர் குளிர்ந்த நீரில்
போட்டு எடுத்து நன்கு பிழிந்து எடுத்து வைக்கவும்.
ஒரு பௌலில் மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து
விடவும்.
பின்னர் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர் தயாராக வைத்துள்ள சோயா உருண்டைகளை சேர்த்து,கூடவே கொஞ்சம்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா கலந்து வைத்துள்ள
சோயா உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுத்தால் சோயா 65 தயார்.
தயாரான சோயா 65 எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
இந்த சோயா 65 மிகவும் சுவையாகவும், கிரிஸ்பியாகவும் இருக்கும்.
0
Leave a Reply