25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


புன்னகைக்கும் 'குவாக்கா'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புன்னகைக்கும் 'குவாக்கா'

குவாக்கா என்பது  ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட, மாக்ரோபோடிடே ஒன்ற, கங்காரு குடும்பத்தைச் சேர்ந்த, பாலுாட்டி விலங்கு.

 

இது,'உலகின் மகிழ்ச்சியான விலங்கு என்று அழைக்கப்படுகிறது. !'ஏனெனில்  , அதன்முகத்தில், இயல்பாக ஒரு புன்னகை போன்ற தோற்றம் இருக்கிறது.

 

குவாக்காக்கள், ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ராட்னெஸ்ட் தீவு மற்றும் பால்ட் தீவு போன்ற, சில சிறிய தீவுகளில் காணப்படுகின்றன.

 

இவை, 40 செ.மீ., நீளமும், 3 கிலோ எடையும் கொண்டவை. இவற்றின் உடல், மென்மையான பழுப்பு நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இ இவை புல், இலைகள், மரப்பட்டைகள் மற்றும் சிறு தாவரங்களை உணவாக உட்கொள்ளும் தாவர உண்ணி.

 

இது, கருவுற்று 27 நாட்களில், ஒரு குட்டியைப் பெற்றெடுக்கும். அந்தக் குட்டி, ஆறு மாதங்கள் வரை தாயின் பையில் வளரும்.

 

குவாக்காக்களின் மகிழ்ச்சியான தோற்றம் மற்றும் நட்பு குணம், அவற்றை உலகளவில் அன்புக்குரியவையாக மாற்றியுள்ளன. இவை, மனிதர்களிடம் பயமின்றி நட்பாக இருக்கும் தன்மை கொண்டவை.

 

இதனால், ராட்னெஸ்ட் தீவில், குவாக்காக்களுடன் சுற்றுலாப் பயணியர், 'செல்பி' எடுத்துக் கொள்வது பிரபலம். இருப்பினும், அவற்றுக்கு உணவளிப்பது அல்லது தொந்தரவு செய்வது, அங்கு சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழிட இழப்புமற்றும் பிற வேட்டையாடி விலங்குகளால், அழிந்து வரும் இனமாக குவாக்காக்கள்பட்டியலிடப்பட்டுள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News