25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கட்டுமானத்தில் கடல் பாசி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கட்டுமானத்தில் கடல் பாசி .

வெறுமனே மண்ணில் புதைக்கப்பட்டு வீணாகும் இந்தப் பாசிகளை பயனுள்ள வகையில்  உபயோகம் செய்யப் பல விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 2022ல், இந்திய தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி) விஞ்ஞானிகள் பாசிகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஒலித்தடுப்புத் தகடுகளை உருவாக்கினர். தற்போது, 'ஜர்னல் ஆப் மெட்டீரியல்ஸ் இன் சிவில் இன்ஜினியரிங் என்ற ஆய்விதழில் வெளியான ஒரு புதிய ஆய்வு, இந்தக் கடல் பாசிகளைக் கொண்டு எதிர்காலத்தில் சுற்று சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட் களை உருவாக்கலாம் எனக் கூறுகிறது.

கடல் பாசியைக் களி மண்ணுடன் கலக்கும்போது அது இலகுவாகவும், சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும், வெப்பத்தை தடுக்கும் தன்மையுடனும் மாறுவதை ஆய்வாளர்கள்  கண்டறிந்தனர். இந்தப் பாசி கலந்த களிமண்ணை கான்கி ரீட்டில் பயன்படுத்தி, அதன்  எடையைக் குறைக்கலாம்.அத்துடன் சிமென்ட் தயாரிப் பில் சுண்ணாம்புக்கல்லுக்கு மாற்றாகப் பாசி சாம்பலைப் பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.

துர்நாற்றம் வீசுகின்ற, விஷத்தன்மை கொண்ட இந்தப் பாசி அழுகும்போது, அமோனியா, மீத்தேன் போன்ற வாயுக்களை வெளியிடுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்குக் கேடு விளைகிறது. மீன்பிடித் தொழிலும், சுற்றுலாத் துறையும் பாதிக்கப்படுகின்றன.

இந்தப் புதிய கட்டுமானப் பொருட்கள் வழக்கமான கட்டுமானப் பொருட்களை விட சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானவை என்று ஆய்வில்தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு, வெப்பமண்டல கடற்கரைகளில் கடல் பாசிகளால் ஏற்படும்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News