25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சிறுநீரக கற்களை வெளியேற்றும் ரணகள்ளி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறுநீரக கற்களை வெளியேற்றும் ரணகள்ளி

சிறுநீரக கற்களை இயற்கையாக வெளியேற்றவும், மஞ்சள் காமாலையின் தீவிரத்தை படிப்படியாக குறைக்க வும் பயன்படக்கூடிய முக்கியமான மூலிகை ரணகள்ளி செடி. இந்த செடியின் ஒரு இலையை மட்டும் எடுத்து நன்கு சுத்தம் செய்து, காலை வெறும் வயிற்றில் மென்று விழுங்கிவிட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு இலைதான் சாப்பிட வேண்டும். அதன்பின் அரை கிளாஸ் வெந்நீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒரு இலை வீதம் சாப்பிட்டு வந்தால், சிறு நீரக கல் இயல்பாக சிறு நீரில் வெளியேறி விடும். இதில் டயுரட்டிக் தன்மை அதிகம் இருப்பதால், சிறு நீரக கற்களால் ஏற் படும் வலியை குறைக்கவும் இது உதவும்.

சிறுநீர் பாதையில் உள்ள தொற் றுகளையும் குணப்படுத்தும். மஞ்சள் பாதிப்பு நோய் இருந்து சிகிச்சை எடுப்பவர்களும் இந்த இலையை 10 நாட்கள்  சாப்பிடலாம். நோயின்  தீவிரம் குறையும்.சர்க்கரை கோளாறு  இருந்தால், ரத்தத்தில்  சர்க்கரையின் அளவை  10 நாட்களும் கட்டுப்பாட்டில் வைக்கும். 10 நாட்களுக்கு  மேல், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம். மைக்ரேன் உட்பட எந்தவிதமான தலைவலியாக இருந்தாலும், ரணகள்ளி இலைகளை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து அரைத்து பற்று போடலாம். ஒரு வாரம் இப்படி செய்யும் போது, தலைவலியின் பாதிப்பு படிப்படியாக குறைந்து விடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News